உயிரிழப்பு ஏற்படும் அபாயம்

Update: 2026-01-18 10:38 GMT

திருச்சி மாவட்டம் முசிறி அய்யம்பாளையம் ஊராட்சி சேந்தமாங்குடி கிழக்கு 4-வது வார்டு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் முற்றிலும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இடிந்து விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்