உளுந்தூர்பேட்டை நகரில் கொசுத்தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கொசு கடிப்பதால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே உளுந்தூர்பேட்டை நகரில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.