வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்ல் பெரிய கிராமத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்குவதாலும், செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதாலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.