மதுரை வில்லாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் காலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களை துரத்தி சென்று அச்சுறுத்துவதுடன், கடித்தும் குதறுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே, தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.