ராதாபுரம் தாலுகா ரஜகிருஷ்ணாபுரம் அந்தோணியார் தெருவில் வாறுகாலில் குப்பைகள் குவிந்ததால் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே வாறுகாலில் குப்பைகளை அகற்றி தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.