தெருநாய்கள் தொந்தரவு

Update: 2026-01-11 16:20 GMT

பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள அனைத்து வீதிகளிலும் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் ரோட்டில் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிப்பதற்காக தெருநாய்கள் துரத்துகின்றன. மேலும் வீடுகளின் முன்பு இயற்கை உபாதைகளை கழித்துவிட்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்