பெரம்பலூர் மாவட்டம் மதனகோபாலபுரம் பாரதிதாசன் நகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த மின்மாற்றியை போக்குவரத்திற்கு இடையூறாக இல்லாத வகையில் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.