பன்றிகள் தொல்லை

Update: 2026-01-11 11:31 GMT

செம்பனார்கோவில் பகுதி திருக்கடையூர் அபிஷேககட்டளை பகுதியில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் செடிகள், மரக்கன்றுகளை சேதப்படுத்துகின்றன. மேலும், சாக்கடைக்குள் உருண்டு,புரண்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகின்றன. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்