தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2026-01-11 11:31 GMT

பட்டுக்கோட்டை பகுதி ஏனாதி வடக்கு தெருவில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகால் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் வடிகாலில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வடிகாலில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்