அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து விக்கிரமங்கலம், கடம்பூர், ஏலாக்குறிச்சி வழியாக தஞ்சாவூர் வரை புறநகர் பஸ் சென்று வந்தது. இந்த பஸ் கடந்த பல மாதங்களாக இயக்கப்படாததால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாமலும், பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.