சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கண்ணதாசன் தெருவில் குரங்குகள் அதிகளவில் உலா வருகின்றன. இந்த குரங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் உணவு பொருட்களை தூக்கி செல்வதுடன், குழந்தைகளை அச்சுறுத்தி அட்டகாசம் செய்கின்றன. இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்து உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த முன்வருமா?