கவுந்தப்பாடி ஊராட்சியில் சத்தி மெயின் ரோட்டில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகே குடிநீர் குழாய் இணைப்புக்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. ஆனால் இந்த குழி சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் குழி இருப்பது தெரியாமல் அதில் விழுந்து வருகின்றனர். எனவே குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.