மேம்பாலம் அமைக்கப்படுமா?

Update: 2026-01-11 07:59 GMT

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள இடையன்விளை கிராமத்தை கன்னியாகுமரி- நாகர்கோவில் ரயில்வே வழித்தடம் இரண்டாக பிரிக்கிறது. இதனால் இந்த கிராமத்தின் அடுத்த பகுதிக்கு செல்வதற்கு பக்கத்து கிராமம் வழியாக ஒரு சாலை அமைத்து கொடுத்தார்கள். ஆனால் அந்த சாலையில் தெருவிளக்குகள் இதுவரை அமைக்கப்படவில்லை. மேலும், ரெயில்வே கேட்டையும் நிரந்தரமாக அடைத்து விட்டார்கள். இதனால் விவசாயிகள் தண்டவாளத்தின் குறுக்காக தங்களுடைய விளை நிலங்களுக்கு சென்று வந்தார்கள். தற்போது இந்த பாதையும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகினற்னர். எனவே, இடையின்விளை கிராமத்தின் அடுத்த பகுதிக்கு செல்ல ரெயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில் மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்