விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டிடங்கள் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் மிகவும் பலவீனமாக குடியிருப்பு கட்டிடம் உள்ளது. மேலும் அவை சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே அவற்றை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.