மதுரை டி.வி.எஸ்.நகர், சத்யசாய் நகர் மற்றும் கோவலன் நகர் பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளை ஏற்படுத்துகிறது. மேலும் இரவில் பணி முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமா?