குமாரபாளையம், பள்ளிபாளையம், வெண்ணந்தூர், மோகனூர், பரமத்திவேலூர் உள்பட பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருநாய்கள் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. மேலும் முதியோர், குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.