திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் குழந்தைகள், கர்ப்பிணிகள் முதல் வயதானவர்கள் வரை சிகிச்சைக்காக பக்கத்து ஊர்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே வக்கம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.