புதிய பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும்

Update: 2026-01-04 13:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் இருந்து வடக்கு தொண்டைமான் ஊரணி வரை செல்லும் சாலையில் தெற்கு தொண்டைமான் ஊரணி பிரிவு சாலை அருகே 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை முற்றிலும் சிதிலமடைந்து எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளதால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே பழைய நிழற்குடையை இடித்துவிட்டு புதிய பயணிகள் நிழற்குடை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்