புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் இருந்து வண்ணாரப்பட்டி செல்லும் விளக்கு சாலை பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளான நிலையில், இன்னும் மின் இணைப்பு கொடுக்காததால் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே எரியாமல் உள்ள உயர் கோபுர மின்விளக்கை ஒளிர்விடச் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.