பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொட்டரையில் மருதையாறு நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் உள் பகுதி மற்றும் கரைகளில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் முளைத்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே நீர்த்தேக்கத்தில் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.