சாலையில் சிதறும் ஜல்லிக்கற்கள்

Update: 2026-01-04 11:50 GMT

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து கற்கள் ஏற்றி செல்லப்படுகிறது. மேடு, பள்ளங்களில் செல்லும்போது அந்த லாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள் சிதறி சாலையில் விழுகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையில் சிதறிக்கிடக்கும் ஜல்லிக்கற்களை அகற்ற சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்