சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில், 1 ஏக்கர் பரப்பளவில் கதர் கிராம வாரிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதில், பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் அம்பர் ராட்டை, பஞ்சு வழங்கப்பட்டு, அதை நூலாக பெற்று கூலி வழங்கி வந்தன. தற்போது கதர் கிராம வாரியத்தின் செயல்பாடுகள் பின் தங்கி நாளடைவில் முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது 20 வருடங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் ஏக்கர் கணக்கில் கட்டிடங்களுடன் காலியிடங்கள் புல் முளைத்து, புதர் மண்டி வீணாகி வருகிறது. எனவே அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
சுந்தர், சேவூர்.