புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியில் உள்ள மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பழுதாகி உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு சீரான மின்சாரம் கிடைப்பதில்லை. இதனால் வீட்டிலுள்ள மின்சாதனங்களை இயக்க முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மின்கம்பங்களை சீரமைத்து அப்பகுதி மக்களுக்கு சீரான மின் வினியோகம் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.