புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. மேலும் குழந்தைகள் கையில் உள்ள திண்பண்டங்களை பிடுங்கிச் செல்கின்றன. இதனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.