புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் தாமரைக் குளம் உள்ளது. இந்த குளம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த குளத்தை சுற்றி சுற்றுக்சுவர் இல்லாததால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் நாய்கள் குளத்துக்குள் சென்று தண்ணீரில் அசுத்தம் செய்கின்றன. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே குளத்தை தூர்வாரி, சுற்றுச்சுவர், நடைபாதை, மின்விளக்கு உள்ளிட்டவை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.