ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் இந்த கொசுக்கடியால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.