உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் இரவு நேரங்களில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை கிடைப்பதில்லை. மேலும் அவர்களை க.விலக்கு பகுதியில் செயல்படும் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகிகள் அறிவுறுத்துகின்றனர். இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும்.