அரியலூர் மாவட்டம், கடுகூர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றிக்திரிகின்றன. இதனால் குழந்தைகளும், பெண்களும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், இவை அந்த வழியாக செல்வோரை கடிக்க பாய்கின்றன. இதனால் பொதுமக்கள் அனைவரும் பயத்துடன் சென்று வரும் சூழல் நிலவி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.