அரியலூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ரெயில் நிலையத்திற்கு இரவு நேரங்களிலும் பலரும் வந்து செல்லும் நிலையில், இப்பாதையில் அதிகளவு பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்வோரை அச்சுறுத்துவதுடன், சாலையோரம் உள்ள குப்பைகளை கிளறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.