சென்னை தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக நடமாடுகின்றன. இது வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதி. மேலும் தெருநாய்கள் அதிகமாக உள்ளதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.