கோவையை அடுத்த குனியமுத்தூர் சிறுவாணி குடிநீர் தொட்டி அருகில் மூவேந்தர் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை பகலிலும், இரவிலும் கூட்டம், கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக நடந்து செல்வோரையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலைகளில் செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெருநாய்கள் தொல்ைலயை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.