கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே நகர்புற சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான கர்ப்பிணிகள், நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் நகர்புற சுகாதார மையத்துக்கு முன்பு திறந்தவெளிதான் காணப்படுகிறது. இதனால் மழை மற்றும் வெயிலில் காத்திருந்து கர்ப்பிணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த நகர்புற சுகாதார மையத்துக்கு முன்பு நிழற்கூரை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.