ஆப்பக்கூடலில் இருந்து தளவாய்பேட்டை வழியாக பவானி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஒரிச்சேரி கிராமம் முன்புள்ள சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையை சாலையோரத்தில் உள்ள மரக்கிளைகள் மறைத்துக் கொண்டுள்ளன. இதனால், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் ஊர் பெயரை அறிந்து கொள்ள முடியாத சூழல் உள்ளது. ஊர் பெயர் பலகையை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?