அறச்சலூர் அருகே வடுகப்பட்டியில் இருந்து குப்பயணசாமி கோவிலுக்கு செல்லும் 1½ கி.மீ. தூரம் சாலை மிகவும் குண்டும்-குழியுமாக காணப்பட்டது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடந்தது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’யில் புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளிவந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குண்டும்-குழியுமான சாலையை சரிசெய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.