‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2025-12-21 18:24 GMT

ஈரோடு வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் ரோட்டில் செல்லும் சாக்கடை கால்வாயையொட்டி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகிலேயே உள்ள மின்கம்பம் வலுவிழந்து சாய்ந்து கீழே விழும் அபாய நிலை இருந்தது. அதற்கு முன்பு பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பள்ளம் சிமெண்டு கலவை பூசி சரிசெய்யப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’-க்கும், பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்