மதுரை நகர், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர் டி.வி.எஸ்.நகர் செல்லும் சாலை சுந்தரராஜபுரம் காய்கறி மார்க்கெட் அருகே இரவு நேரங்களில் சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த கால்நடைகள் ஒன்றை ஒன்று தாக்கி சண்டையிட்டு கொள்வதால் சாலையில் செல்லும் நடைபாதையினர் அச்சமடைகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.