புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அரசு தாலுகா மருத்துவமனை உள்ளது. இங்கு பிசியோதெரபி பிரிவும் செயல்பட்டு வருகிறது. இதில் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் எலும்பு தேய்மானம், மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் மருத்துவமனையில் மின்காந்த சிகிச்சைக்கான எந்திரம் ஒன்று மட்டுமே உள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் அவ்வப்போது மின்காந்த சிகிச்சை எந்திரம் செயல்படுவது இல்லை. எனவே கறம்பக்குடி அரசு தாலுகா மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.