ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-12-21 14:41 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள ஒசுவப்பட்டி கிராமத்தில் விவசாய வயல் பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் காற்றடிக்கும் நேரத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்தால் கால்நடைகள் நடமாட்டத்தின்போதும், பொதுமக்கள் மீதும் விழுந்தால் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்