ஏரிக்கரை அருகே தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2025-12-21 13:25 GMT

அரியலூர் மாவட்டம் மு.புத்தூர் கிராமத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியை அப்பகுதி பொதுமக்களின் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த ஏரியானது சாலையோரம் உள்ளதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி ஏரிக்குள் வாகனத்தை விடும் சூழல் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. இதற்கு முன்பு அதிகாரிகள் தரப்பில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டது. ஆனால் இந்த இரும்பு தடுப்பும் ஏரிக்குள் விழுந்து விட்டது. எனவே ஏரிக்கும், சாலைக்கும் இடையே தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்