போதுமான மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2025-12-21 13:19 GMT

அரியலூர் கல்லங்குறிச்சி சாலையானது முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. இந்த சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இருப்பினும் போதுமான அளவில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அதேபோல், சாலையின் குறுக்கே தெருநாய்கள் படுத்துக்கொள்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதுமான அளவில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்