அரியலூர் மாவட்டம் ராயம்புரம் இந்திரா நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே அப்பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியாத காரணத்தால், இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி சட்டவிரோதமான செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள தெருவிளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.