கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அங்கு சிறுத்தைகள் மற்றும் கருஞ்சிறுத்தைகள் பதுங்கி இருந்து இரவு நேரத்தில் வெளியே சுற்றித்திரிக்கின்றன. அவை பகலிலும் வெளியேறி பள்ளி மாணவ-மாணவிகளை தாக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே வால்பாறையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து உள்ளது. எனவே புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.