‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-12-21 11:42 GMT

அரியலூர் மாவட்டம் முனியங்குறிச்சி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் மு.புத்தூர் கிராமத்தில் சாலை விரிவாக்கம் செய்து புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இவ்வழியே செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதால் முனியங்குறிச்சி கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுழைவுவாயில் அருகே பள்ளி மாணவர்கள் நலன் கருதி நெடுஞ்சாலை துறையினர் கடந்த ஆண்டு அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். அந்தப் பலகை கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் கேட்பாரற்று கீழே விழுந்து கிடக்கிறது என ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அறிவிப்பு பலகையை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்