மதுரை நகர் திருமலை நாயக்கர் மஹால் சாலை இருபுறங்களிலும் மண் அதிகளவில் உள்ளதால் புழுதி மற்றும் தூசி அதிகளவில் எழுகின்றது. இதனால் இருமல் மற்றும் தும்மல் போன்ற சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள மண்ணை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.