பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2025-12-14 17:02 GMT

 மகுடஞ்சாவடி ஊராட்சி எர்ணாபுரம் பகுதியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ.3½ லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவடைந்தும் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. மேலும் கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது. எனவே சுகாதார வளாகத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்