கூடலூரை அடுத்த லோயர்கேம்ப் வைரவன் வாய்க்கால் முதல் கூடலூர் ஒழுகு வழிச்சாலை சட்ரஸ் பகுதி வரை முல்லைப்பெரியாற்றின் கரைப்பகுதிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும் வரத்துக்கால்வாய்களின் கரைப்பகுதியிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதன் காரணமாக கால்வாய் சுருங்கி, விவசாய பாசனத்துக்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே முல்லைப்பெரியாற்றின் கரைப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், வரத்துக்கால்வாய்களின் கரைப்பகுதியில் உள்ள புதர்களையும் அகற்ற வேண்டும்.