போடி பகுதியில் 28 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் காட்சிப்பொருளாகவே இருக்கின்றன. இதனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், வாகன விபத்துக்கு காரணமானவர்களை கண்டறிவதில் போலீசாருக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.