கோபி பெருந்தலையூர் அருகே குட்டிபாளையம் கூனமேடு பகுதியில் உள்ள ரேஷன் கடை பழுதடைந்துள்ளது. சிலாப்பில் உள்ள கான்கிரீட் உடைத்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் சிலாப் இடிந்்து ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் மீது விழும் அபாயம் உள்ளது. அதற்கு முன்பு சிலாப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.