தர்மபுரி மாவட்டம் ஏரியூர் செல்லும் சாலையில் முதுகம்பட்டி, சீலநாயக்கனூர் கிராமங்களில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் செல்போன் கோபுரம் இல்லாததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.