அரியலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், ஜெயங்கொண்டம் செல்வதற்கு பஸ் ஏறுவதற்காக பலரும் சாலையோரம் வந்து நிற்கின்றனர். இந்த சாலையோரம் பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு தளத்தில் உள்ள மூடி உடைந்து கிடக்கிறது. மேலும் அதிலுள்ள இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளன. இதனால் ஏற்படும் ஆபத்தை உணராத பெண்கள் மற்றும் வயதானவர்கள் பலரும் இதன்மீது அமர்ந்துள்ளனர். இதனால் சிமெண்டு தளம் உடைந்து அவர்கள் கீழே விழ வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.